கல்லூரி தொடங்கப்பெற்ற 2009 ஆம் ஆண்டு முதல் பொதுத்தமிழைப் பாடமாகக் கொண்டு தமிழ்த்துறை செயல்பட்டு வந்தது. 2015 – 2016 கல்வியாண்டில் தமிழை முதன்மைப் பாடமாகக் கொண்டு இளங்கலைத் தமிழ் இலக்கியம் பாடப்பிரிவு தொடங்கப் பெற்றது. தூய்மையான காற்றோட்ட வசதிகளுடன், நவீன கட்டமைப்புடன் அமையப்பெற்ற வகுப்பறைகள், நூலகம் போன்றவை மாணவியரின் சாதனைக் களஞ்சியமாகத் திகழ்வது இத்துறையின் சிறப்பாகும். மாணவியர்க்கு கல்வியுடன் ஒழுக்கம், தன்னம்பிக்கை, ஆளுமைத்திறன், தலைமைப்பண்பு, சேவை மனப்பான்மை போன்ற உயரிய நற்பண்புகள் வளர்க்கும் களமாகத் தமிழ்த்துறை திகழ்கின்றது.
நோக்கம்
செம்மொழித் தமிழை மேலும் வளர்ச்சியடையச் செய்வது.
குறிக்கோள்
கல்வியில் மிகவும் பின்தங்கிய மாணவியர் பிழையின்றி எழுதவும் படிக்கவும் செய்தல். • மாணவியரின் படைப்பாற்றலை மேம்படுத்ததுதல்.• அறநூல்களையும் காப்பியங்களையும் கற்றுணரச் செய்து நல்வழிப்படுத்துதல்.• தமிழரின் பண்பாட்டையும் மரபையும் அறியச்செய்தல்.